நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரு பெண்களிடம் கொள்ளை நடவடிக்கை: சந்தேக நபர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் 

கோலாலம்பூர்: 

இரு பெண்களிடம் கொள்ளை நடவடிக்கை புரிந்ததாக ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டார் 

இருப்பினும், தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மறுத்து அவ்வாடவர் விசாரணை கோரினார் 

நீதிபதி தல்ஹா பச்சோக் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது குற்றஞ்சாட்டப்பட்ட 36 வயதுடைய தனித்து வாழும் தந்தையான அப்துர் ரசாக் அதனை மறுத்தார் 

52 வயதுடைய இந்தோனேசிய நாட்டு மாதுவிடம் கொள்ளை புரிந்ததாகவும் மற்றொரு குற்றம் உள்ளூர் பெண்ணிடம் கொள்ளையடித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 394, 397 ஆகிய செக்‌ஷன்களின் கீழ் அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது 

இந்த வழக்கு விசாரணை மே 13ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset