
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் விபத்து நிகழ்ந்த பகுதியில் கடுமையான வெள்ளம்
சுபாங் ஜெயா:
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தற்போது கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் பெய்த கனமழையினால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறும் காணொலி ஒன்று டிக் டாக் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
ஏற்கனவே எரிவாயு குழாய் விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீளாத நிலையில் தற்போது வெள்ளப்பேரிடர் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது
வீட்டின் சமையலறை, மேற்கூரை யாவும் சேதமடைந்து விட்டன. தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பினால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கார்கள் யாவும் வெப்பத்தினால் உருகின.
தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் திணறி வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm