
செய்திகள் மலேசியா
நெகாராக்கூ விவகாரம்: தேசிய நிந்தனை சட்டத்தின் கீழ் ரத்து நாகா கைது
ஈப்போ:
நெகாராக்கூ தேசியக் கீதத்தை சீன மொழியில் பாடிய விவகாரம் தொடர்பில் ரத்து நாகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்
ஷாருல் எமா அல்லது அனைவராலும் அறியப்படும் ரத்து நாகா இன்று மதியம் 12 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் சைட் மாலேக் கூறினார்
1948 தேசிய நிந்தனை சட்டம், 1998 தொடர்பு பல்லூடக சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் ரத்து நாகா கைது செய்யப்பட்டார்
சீனமொழியில் நெகாராக்கூ பாடிய விவகாரம் தொடர்பில் கடும் ஆட்சேபம் எழுந்தது. ஆனால் சீன மாணவர்கள் சீன மொழியில் பேராக் மாநில பாடலைத் தான் பாடினார்கள்.
இந்த விவகாரம் தொடர்பில் காணொலியைப் பதிவேற்றம் செய்த ரத்து நாகா 10 நிமிடங்களுக்குப் பிறகு அதனை அழித்துள்ளார்
இந்த விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையானது. நடப்பு அரசாங்கத்தை தவறாக சித்தரிக்கும் போக்கு காரணமாக MCMC அவருக்கு எதிராக ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm