நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம்: அதிபர் இமானுவெல் மெக்ரோன் தகவல் 

பாரிஸ்: 

பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவெல் மெக்ரோன் நம்பிக்கை தெரிவித்தார் 

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் அனைத்துலக கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் என்று அவர் கூறினார். 

இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு செய்யப்படும் என்று பிரான்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது 

சவூதி அரேபியாவுடன் பிரான்ஸ் இந்த கூட்டத்தை நடத்தும் வேளையில் அனைத்துலக சமூகத்தின் பார்வைகளைக் கொண்டு பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முனைப்பு காட்டுவோம் என்று மெக்ரோன் சொன்னார் 

ஐநாவில் உறுப்பியம் கொண்ட 193 நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்துள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset