நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் நெடுஞ்சாலையில் கோர விபத்து: 4 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: 

அமெரிக்காவின் கொலராடோ மாநிலம், I-25 நெடுஞ்சாலை பகுதியில், 30 வாகனங்கள் மோதிய விபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பியூப்லோ நகரத்தின் அருகே காலை 10 மணிக்குப் பிறகு நிகழ்ந்தது.

கொலராடோ மாநில போலீஸ் தெரிவித்ததாவது, வடக்குப் பக்கம் செல்லும் வழியும், தெற்குப் பக்கம் செல்லும் வழியும் இரண்டுமே மூடப்பட்டுள்ளது. 

கொலராடோ போக்குவரத்து துறை வெளியிட்ட புகைப்படங்களில், பல வாகனங்கள் சாலையில் குவிந்திருக்கும் நிலையில்,  மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணைக்கு உட்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset