செய்திகள் உலகம்
போரின் நிழலில் புதைந்த கனவுகள்: காசா விளையாட்டு உலகம் சிதைவு
காசா:
2023 அக்டோபர் மாதம் முதல் காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் குறைந்தது 1,007 பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 265 விளையாட்டு வசதிகள் முற்றிலும் அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 45 பேர் பெண்கள் என்றும் விளையாட்டு அரங்கங்கள், பயிற்சி மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், இளைஞர் மையங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன என்றும் அதன் துணைத் தலைவர் ஆசாத் அல்-மஜ்டலாவி தெரிவித்தார்.
இந்த அழிவுகள் வீரர்களின் விளையாட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கு உளவியல், சமூக ஆதரவை வழங்கி வந்த முழு விளையாட்டு அமைப்பையும் செயலிழக்கச் செய்துள்ளதாக அவர் கூறினார்.
“நாங்கள் உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனஅழுத்தம், தொழிலில் முன்னேற்றமின்மை , விளையாட்டுகளை நம்பி வாழ்ந்த குடும்பங்களின் வருமான இழப்பு போன்ற பல பிரச்சினைகளும் இதில் அடங்கும்,” என்றார் அவர்.
இத்தனை சேதங்களுக்கிடையிலும், உள்ளூர் வீரர்கள், கால் துண்டிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி வீரர்கள் உள்ளிட்டோர் மணல் தரையிலும் இடிந்து கிடக்கும் கட்டிடங்களின் இடிபாடுகளிலும் குறைந்த அளவில் கால்பந்து போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனோடு, சர்வதேச விளையாட்டு பிரபலங்களும் காசா மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மென்செஸ்டர் சிட்டி அணியின் மேலாளர் பெப் குவார்டியோலா, காசா மாற்றுத் திறனாளி கால்பந்து அணியின் ஜெர்சியில் கையெழுத்திட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட லீக் அமைப்புகள், பயிற்சி முறைகள் வீரர் மேம்பாட்டு கட்டமைப்புகள் மிகக் குறுகிய காலத்தில் அழிந்துவிட்ட நிலையில் விளையாட்டு ஆய்வாளர்கள் இந்த அழிவுகளை “ஒரு முழு தலைமுறையின் இழப்பு” என தெரிவித்துள்ளனர்.
எத்தனை தடைகள் இருப்பினும், காசா மக்களின் உறுதியின் அடையாளமாக விளையாட்டு தொடர்ந்து நிலைத்து வருகிறது. குறிப்பாக கால்பந்து விளையாட்டு, ஒடுங்க மறுக்கும் மனநிலையின் சின்னமாக தொடர்ந்து விளையாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 19, 2026, 5:24 pm
தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
February 19, 2026, 4:09 pm
நைஜீரியாவில் விஷ வாயு தாக்கம்: 37 சுரங்கத் தொழிலாளர்கள் பலி
February 19, 2026, 12:19 pm
கலிபோர்னியாவில் கடும் பனியினால் 8 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்
February 18, 2026, 4:19 pm
அமெரிக்காவின் நெடுஞ்சாலையில் கோர விபத்து: 4 பேர் உயிரிழப்பு
February 18, 2026, 12:42 pm
இராணுவ முகாம் அருகே கண்ணிவெடி வெடிப்பு: 13 வயது சிறுவன் உயிரிழப்பு
February 18, 2026, 12:01 pm
பட்டாசு கடை வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர்
February 17, 2026, 5:34 pm
அளவுக்கு மீறிய பயணிகள் ஏற்றம்: பேருந்து அனுமதி இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தம்
February 16, 2026, 6:41 pm
பாகிஸ்தானிலிருந்து விலகிய ஆப்கானிஸ்தான்: மருந்துத் துறைக்கு புதிய அறைகூவல்
February 15, 2026, 11:47 am
