நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை

சியோல்: 

தென் கொரிய நீதிமன்றம் முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. 2024 டிசம்பரில் நாட்டில் இராணுவ ஆட்சி விதிக்க முயன்றபோது கிளர்ச்சியை வழிநடத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சியோல் மத்திய நீதிமன்ற நீதிபதி ஜி க்வி-யியோன், இவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை நிராகரித்து ஆயுள் தண்டனை வழங்கியுள்ளார்.

யூன் சுக் யோலின் வயது, குற்றப்பதிவு இல்லாமை, தனிப்பட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதி விளக்கினார்.

“இருப்பினும், சம்பந்தப்பட்ட அந்த முன்னாள் ஜனாதிபதி நேரடியாக இந்தக் குற்றத்தை திட்டமிட்டு நடத்தினார். இதில் பலர் பாதிக்கப்பட்டதுடன், சமூகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நிராகரிக்க இயலாது.

அவர் இதுவரை வருத்தம் தெரிவித்ததோ, மன்னிப்பு கேட்டதோ இல்லை,” என நீதிபதி கூறினார்.

இதனிடையே, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் யோங்-ஹ்யுனுக்கு இந்த விவகாரத்தில் பங்கு வகித்ததற்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

65 வயதான யூன் சுக் யோல், ‘அரசுக்கு எதிரான கூறுகளை’ அகற்ற வேண்டும் என்ற காரணத்தைக் கூறி தொலைக்காட்சி உரையின் மூலம் அவசரகால இராணுவ ஆட்சியை அறிவித்தது, இறுதியில் அவருக்கே பாதகமாக முடிந்தது.

அந்த அவசர முடிவு அவரைப் பதவி நீக்கம், கைத , நீதிமுறையை தடை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கியது.

யூன் சுக் யோலின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே  திரண்டு, அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என கோஷமிட்டனர்.

கடந்த மாதம், அவரது மனைவி கிம் கியோன் ஹீ ஊழல் வழக்கில் 20 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றிருந்தார். –

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset