செய்திகள் உலகம்
நைஜீரியாவில் விஷ வாயு தாக்கம்: 37 சுரங்கத் தொழிலாளர்கள் பலி
நைஜீரியா:
நைஜீரியா நாட்டின் பிலாடியூ பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட கார்பன் மோனோக்சைடு விஷ வாயு தாக்கத்தில் குறைந்தது 37 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அல் ஜசீரா தெரிவித்தது.
சம்பவ இடம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஈயம் சுரங்கமாக அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அங்கு கனிமங்கள் தேக்கமடைந்ததால் விஷ வாயு வெளியேறி உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த நைஜீரியா மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் கண்காணிப்பு இன்றி நடைபெறும் சட்டவிரோத சுரங்க வேலைகள், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 19, 2026, 5:24 pm
தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
February 19, 2026, 5:19 pm
போரின் நிழலில் புதைந்த கனவுகள்: காசா விளையாட்டு உலகம் சிதைவு
February 19, 2026, 12:19 pm
கலிபோர்னியாவில் கடும் பனியினால் 8 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்
February 18, 2026, 4:19 pm
அமெரிக்காவின் நெடுஞ்சாலையில் கோர விபத்து: 4 பேர் உயிரிழப்பு
February 18, 2026, 12:42 pm
இராணுவ முகாம் அருகே கண்ணிவெடி வெடிப்பு: 13 வயது சிறுவன் உயிரிழப்பு
February 18, 2026, 12:01 pm
பட்டாசு கடை வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர்
February 17, 2026, 5:34 pm
அளவுக்கு மீறிய பயணிகள் ஏற்றம்: பேருந்து அனுமதி இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தம்
February 16, 2026, 6:41 pm
பாகிஸ்தானிலிருந்து விலகிய ஆப்கானிஸ்தான்: மருந்துத் துறைக்கு புதிய அறைகூவல்
February 15, 2026, 11:47 am
