நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பட்டாசு கடை வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர்

பெய்ஜிங்: 

கிழக்கு சீனாவில் உள்ள ஒரு பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவி்த்துள்ளனர்.

சீனாவின் கிராமப்புற பகுதிகளில் சீனப் புத்தாண்டு  பண்டிகை, முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடும் போது, அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளும் ராக்கெட் வெடிகளும் அடிக்கடி வெடிக்கப்படுகின்றன.

உள்ளூர் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜியாங்சு மாகாணத்தின் டோங்ஹாய் மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு கடையில் கிராமவாசிகள் தவறான முறையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

“அவசர மேலாண்மை துறை, தீயணைப்பு, பொது பாதுகாப்பு, சுகாதார துறைகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன,” என்று டோங்ஹாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிப்பால் ஏற்பட்ட தீ விபத்து மாலை 4 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், இதில் எட்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் லேசான காயங்களுடன் தப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சீனப் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பட்டாசின் பயன்பாடு உச்ச நிலையை எட்டும் நிலையில் இருப்பதால், கடைகளின் வெளியே பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு ஏற்ற முயற்சிப்பது அல்லது புகைபிடிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் உள்ள பட்டாசு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் பாதுகாப்பு விதிமுறைகள் தளர்வாக இருப்பதால் தொழில்துறை விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன. இந்த மாதம் வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு உயிரி தொழில்நுட்ப தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பிலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset