செய்திகள் உலகம்
அளவுக்கு மீறிய பயணிகள் ஏற்றம்: பேருந்து அனுமதி இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தம்
ஹனோய்:
துயென் குவாங்–பாக் நின் வழித்தடத்தில் இயங்கிய நீண்ட தூர பேருந்து ஒன்று, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பயணிகளை ஏற்றிச் சென்றதாக கண்டறியப்பட்டுள்ளது. 45 இருக்கைகள் மட்டுமே உள்ள அந்த பேருந்தில் 83 பயணிகள் பயணித்தனர்.
நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண்–1 அதிகாரிகள், சமூக ஊடக செயலி மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், நொய் பாய்–லாவ் காய் நெடுஞ்சாலையில் அந்த பேருந்தை நிறுத்தினர்.
வியட்நாம்நெட் தகவலின்படி, போக்குவரத்து காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட சோதனையில், பேருந்து ஓட்டுநருக்கும், வாகன உரிமையாளருக்கும் சேர்த்து 207 மில்லியன் வியட்நாம் டொங் (சுமார் RM31,100) அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அதிகமான பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்ய காவல்துறை உத்தரவிட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
