நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவுக்கு எதிராக 104 விழுக்காடு வரி விதிப்பு: அமெரிக்கா பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி

வாஷிங்டன்: 

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா 104 விழுக்காடு வரி விதித்ததை அடுத்து அமெரிக்காவின் பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன 

அமெரிக்காவும் சீனாவும் நேரடியாக வர்த்தக போரில் களம் இறங்கியுள்ளன 

இதனால் அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கு கூடுதலாக 104 விழுக்காடு வரியை அறிவித்தது 

இந்நிலையில் பங்கு சந்தையில் அமெரிக்காவின் பங்குகள் யாவும் கடும் வீழ்ச்சி அடைந்தன. 

அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் பங்குகள் யாவும் கடும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளது 

இந்நிலையில் ஐபோன் கைப்பேசியின் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் நான்கு நாட்களில் 22 விழுக்காடு அதிகமாக இழப்பைச் சந்தித்தது 

அமெரிக்காவின் கடும் வரி விதிப்பால் கிழக்காசிய நாடுகளான தென்கொரியா, ஜப்பான் நாடுகள் அமெரிக்காவுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset