நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென் கொரியாவில் பிறப்பு விகிதம் உயர்வு

சியோல்:

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் தென் கொரியாவில் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகப் புள்ளியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியா உலகின் மிக நீண்ட ஆயுட்கால விகிதமும் மிகக் குறைந்த பிறப்பு விகிதமும் கொண்ட நாடாகும்.

பெண்கள் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும், மக்கள்தொகை நிலையாக இருப்பதை உறுதி செய்யவும் அரசு பில்லியன் கணக்கில் டாலரைச் செலவிட்டுள்ளது.

ஜனவரி முதல் மே வரை பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 6.9 விழுக்காடு அதிகரித்து சுமார் 106,000ஆக இருந்தது.

2024-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 8,300 அல்லது 3.6 விழுக்காடு அதிகரித்து 238,300 ஆக உயர்ந்தது.

முப்பது வயதின் தொடக்கத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஒட்டுமொத்தமாக திருமணங்களின் எண்ணிக்கை கூடியது. அதனால் பிறப்பு விகிதமும் உயர்ந்துள்ளது என்று புள்ளியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset