நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பரவும் காட்டு தீ: இந்தோனேசியாவில் அவசரகால நிலை அறிவிப்பு

இந்தோனேசியா:

இந்தோனேசியாவில் வறட்சியினால் தீ விபத்துக்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மேற்கு சுமத்ராவிலுள்ள சோலோக், லிமாபுலு பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், சோலோக்கிலுள்ள 14 மாவட்டங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மேற்கு சுமத்ரா மாகாணத்தின் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் BNPB கூறியது.

மேலும், மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கருதப்படும் ரியாவ் மற்றும் தெற்கு சுமத்ரா மாகாணங்களில், தீயை அணைக்கும் முயற்சிகளுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சவாலான நிலப்பரப்பு மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக தீயை அணைக்கும் முயற்சிகள் கடினமாகி உள்ளன.

இவ்வாண்டு தொடக்கத்தியிலிருந்து ஜூலை 19ஆம் தேதிவரை ஒன்பது மாகாணங்கள் மற்றும் நகரங்களில் 140.8 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கி குறைந்தது 64 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset