நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

குர்ணால் பாண்ட்யா அபாரம்: மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி

மும்பை: 

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

வான்கடே  அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பில் சால்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனையடுத்து இணை சேர்ந்த விராட் கோலி - படிக்கல் அதிரடியாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். 

2-ஆவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த இணை பிரிந்தது. படிக்கல் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset