
செய்திகள் விளையாட்டு
மைஸ்கில் அறவாரியத்தின் இளையோர் கிண்ண கால்பந்து போட்டி 8 அணிகள் பங்கேற்பு: பசுபதி
கோலாலம்பூர்:
மைஸ்கில் அறவாரியத்தின் Dover Elevator இளையோர் கிண்ண கால்பந்து போட்டியில் 8 அணிகள் களமிறங்கவுள்ளன.
மைஸ்கில் அறவாரியத்தின் தலைவர் பசுபதி இதனை கூறினார்.
Dover Elevator கிண்ண கால்பந்து போட்டி வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மைஸ்கில் வளாகத்தில் நடைபெறுகிறது.
17 வயதுக்கு உட்பட்ட இந்த போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்கிறது என்று மைஸ்கில் அறவாரியத்தின் இயக்குனர் வழக்கறிஞர் பசுபதி தெரிவித்தார்.
My skills FC, Kalumbang Junior, SMK Kalumbang, Youth Tigers A, Youth Tigers B,Surian FC, SR Elite FC A, SR Elite FC B ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளாகும்.
இந்த போட்டியின் முதன்மை ஸ்போன்ஸர் Dover Elevator நிறுவனமாகும்.
இளையோர் மத்தியில் கால்பந்து போட்டியை ஊக்குவிக்கும் வகையில் இரண்டாம் ஆண்டாக இந்த போட்டி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இன்று கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய ஆட்டக்காரர், தேசிய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்றுநர் டத்தோ கே.ராஜகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் Dover Elevator நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேரன்ஸ் யோர்க் போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு வழங்கப்படும் சாம்பியன் கிண்ணத்தை போட்டி ஏற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்தார்.
மைஸ்கில் அறவாரிம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
கல்வியை பாதியிலேயே கைவிட்ட மாணவர்களுக்கு கைத்தொழில் கற்றுக் கொடுக்கும் ஒரு தொழில் நுட்ப பள்ளியாக மைஸ்கில் விளங்குகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப மாணவர்களை உருவாக்கிய பெருமை இந்த நிறுவனத்திற்கு உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 9:58 am
2026 உலகக் கிண்ண போட்டியில் மீண்டும் களமிறங்குவாரா மெஸ்ஸி?
April 19, 2025, 9:55 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
April 18, 2025, 10:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் ஹிலால் வெற்றி
April 18, 2025, 10:12 am
ஐரோப்பா லீக் கிண்ண அரையிறுதியாட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்
April 17, 2025, 9:17 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: நியூகாஸ்டல் வெற்றி
April 17, 2025, 9:04 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி அர்செனல் சாதனை
April 17, 2025, 9:00 am
IPL 2025: சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிக் கொடி நாட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்
April 16, 2025, 9:11 am