நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நாடு முழுவதும் உள்ள எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்து மிகப் பெரிய பாதிப்பையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்தில் தீ விபத்தில் 219 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.

இதனால் பில்லியன் ரிங்கிட் மதிப்பில் இழப்புகம் ஏற்பட்டுள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

நிலத்தை தோண்டியது, பட்டாசு வெடித்தது உட்பட பல காரணங்களை முன் வைத்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டுகிறது.

இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு நாடு முழுவது உள்ள எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அரசாங்கம்ம் அதிகரிக்க வேண்டும்.

காரணம் சிரம்பானில் இக்குழாய் அமைத்திருக்கும் இடத்தில் குப்பைகள் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

ஆகையால இவ்விவகாரத்தில் அலட்சியமாக் இருக்காமல் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset