நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்வு

ஜொகூர் பாரு:

ஜொகூர் பாருவிலுள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 326 ஆக உயர்ந்துள்ளது, 

இன்று காலை 8 மணி நிலவரப்படி, பத்து பஹாட்டில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 326 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜொகூரில், மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்தார். 

நேற்று மாலை 94 குடும்பங்களைச் சேர்ந்த 285 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் ஶ்ரீ காடிங் இடைநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,

பத்து பஹாட்டில் சுங்கை செங்கராங்கின் நீர்மட்டம் இப்போது எச்சரிக்கை அளவாக 3.35 மீட்டராக உள்ளது.

அதே நேரத்தில் சுங்கை பத்து பஹாட் 2.30 மீட்டராக உள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset