
செய்திகள் மலேசியா
சுபாங்ஜெயா நகராண்மை கழகமும் பெட்ரோனாஸ் நிறுவனமும் நிலத்தை தோண்டும் பணிக்கு அனுமதி வழங்கின: எஸ்ஓபிக்கு உட்பட்டு தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டன: மேயர்
சுபாங்ஜெயா:
புத்ரா ஹைட்ஸில் உள்ள எரிவாயு குழாய் தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் நிலத்தை தோண்டும் பணிகள் நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்க மேற்கொள்ளப்பட்டன.
சுபாங் ஜெயா நகராண்மை கழகத் தலைவர் மேயர் டத்தோ அமிருல் அசிசான் அப்துல் ரஹிம் இதனை உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு சுபாங் ஜெயா நகராண்மை கழகம், பெட்ரோனாஸ் ஆகியவற்றின் செல்லுபடியாகும் அனுமதிகளும் உள்ளன.
அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக குடியிருப்பாளர்களிடமிருந்து முன்னர் எங்களுக்கு புகார்கள் கிடைத்தன.
நாங்கள் விசாரணை நடத்தியதில் அந்தப் பணிக்கு நகராண்மை கழகம், பெட்ரோனாஸ் நிறுவனத்திடம் அனுமதி பெறப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்கியது கண்டறியப்பட்டது.
இங்குள்ள சம்பவக் கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2025, 11:18 am
பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இரு புத்தகங்களுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்தது
April 10, 2025, 10:54 am
பணியின்போது வகுப்பறையில் உறங்கும் ஆசிரியரின் காணொலி வைரல்
April 10, 2025, 10:53 am