நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்கள் சீர்திருத்தங்களையும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் ஆதரவு வழங்க வேண்டும்: பிரதமர் அன்வார் வலியுறுத்து                

புத்ரா ஜெயா: 

அரசாங்கம் மேற்கொள்ளும் சீர்திருத்தகளைக் குறிப்பாக  ஊழலை எதிர்த்துப் போராடுவதிலும், நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும், அரசு ஊழியர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய தேசியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசு ஊழியர்கள் முன்முயற்சியுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டார். 

அரசு முன்மொழியும் சீர்திருத்தங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதைச் சக அரசு ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த விவகாரங்கள் அற்பமானவை என்று எண்ண வேண்டாம் என்றும் பிரதமர் நினைவூட்டினார். 

நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது என்ற நமது பொதுவான இலக்கை நிலைநிறுத்துவதில் அமைச்சகமும் தலைவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset