நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டோக்கியோவில் சுற்றுலா பேருந்து விபத்தில் காயமடைந்த 47 பேரில் மலேசியர்களும் அடங்குவர்

பெட்டாலிங் ஜெயா: 

ஜப்பானின் டோக்கியோவில் நேற்று இரண்டு சுற்றுலா பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் காயமடைந்த 47 பேரில் மலேசியர்களும் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 

இந்தச் சுற்றுலா பேருந்தில் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் தைவான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இருப்பினும், இது குறித்து விஸ்மா புத்ரா எந்த அதிகாரப்பூர்வத் தகவலையும் வெளியிடவில்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset