நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிறப்பு, இறப்புக்கு மத்தியில் மதமாற்றப் பிரச்சினைகள் ஆலயங்களுக்கு பெரும் சவாலாக உள்ளன: ஓம்ஸ் தியாகராஜன்

கோலாலம்பூர்:

பிறப்பு, இறப்புக்கு மத்தியில் மதமாற்றப் பிரச்சினைகள் ஆலயங்களுக்கு பெரும் சவாலாக உள்ளன என்று ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.

மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இந்து ஆலயங்களுடனான அவசர சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

குறிப்பாக இந்து ஆலயங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இன்றைய நிகழ்வு நடைபெறுகிறது. இதுவொரு சிறப்பான முயற்சியாகும்.

என்னை பொறுத்தவரையில் நாட்டில் ஆலயங்கள் எல்லாம் சிறப்பான முறையில் உள்ளன.

ஆனால் ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் ஆலயங்களுக்கு வருகிறார்கள் என்பது தான் கேள்வியாகும்.

இந்திய சமுதாயத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே வேளையில் இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது.

இறப்பு, பிறப்பு விகிதத்திற்கு மத்தியில் மதமாற்றப் பிரச்சினையும் ஆலயங்களுக்கு பெரும் சவாலாக உள்ளன.

இதனால் கூட ஆலயங்களில் பக்தர்களின் எண்ணிக்கை குறையலாம்.

மேலும் இந்து மதத்தில் இருந்து மாறி வேறு மதங்களுக்கு செல்வது அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும்.

ஆனால் வேறு மதங்களுக்கு சென்று விட்டு இந்து மதத்தை தாக்குவது அநாகரிகமாகும்.

ஆக இதுபோன்ற விவகாரங்களில் மலேசிய இந்து சங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset