நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்து; தேங்கி நிற்கும் நீரை அகற்றும் பணியில் கவனம் செலுத்தப்படுகிறது: போலிஸ்

சுபாங் ஜெயா:

எரிவாயு குழாய் தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் தேங்கி நிற்கும் நீரை  அகற்றும் பணியில் கவனம் செலுத்தப்படுகிறது.

சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமட் இதனை தெரிவித்தார்.

நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து, சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்புப் பகுதியில் தண்ணிர்  தேங்கி நிற்கிறது.

இந்த  தண்ணீரை அகற்றுவது  ஆறாவது நாளான இன்றைய முக்கிய நடவடிக்கை ஆகும்.

பாதுகாப்பு மதிப்பீட்டுப் பணிகள் மீண்டும் தொடங்குவதற்காக இது மேற்கொள்ளப்படுகிறது.

வழக்கம் போல் மதிப்பீட்டுப் பணிகளைத் தொடர்வதற்கு முன்பு இன்னும் நிறைய தண்ணீர் உறிஞ்சப்பட வேண்டியுள்ளது.

இன்று காலை நாங்கள் இன்னும் தீப் பள்ளத்தில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset