நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க மலேசிய இந்து சங்கம் பிரதமரிடம் மனு சமர்ப்பிக்கவுள்ளது

கோலாலம்பூர்: 

ஆலயங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க மலேசிய இந்து சங்கம் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒரு மனுவைச் சமர்ப்பிக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கணேசன் கூறினார்.

மேலும், ஆலயங்கள் தொடர்பான பிரச்சனைகள், குறிப்பாக நிலம் தொடர்பான பிரச்சனைகளை முறையாகத் தீர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

இந்து சங்க உறுப்பினர்களிடம் குறைகளைக் கேட்டு அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்ட பின் பிரதமரிடம் மனு சமர்ப்பிக்கப்படும் என்பதை கணேசன் தெரிவித்தார். 

சமீபத்திய ஆலய விவகாரத்தை ஒரு பாடமாகக் கருதி செயல்பட வேண்டும். 

அப்போதுதான் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் நடக்காது என்று அவர் குறிப்பிட்டார். 

ஆக, ஆலயங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது குறித்த மனு பிரதமர் அலுவலக பிரதிநிதியிடம் பிற்பகல் 3 மணிக்கு இன்று சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset