நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூருக்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராகவுள்ளது

பெட்டாலிங் ஜெயா: 

தலைநகரை நோக்கி செல்லும் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை 10 மணி நிலவரப்படி போக்குவரத்து சீராக உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. 

நோன்பு பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிய பொதுமக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்புகின்றனர். 

E1 மற்றும் E2 வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (PLUS), அதே போல் இரு திசைகளிலும் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 1 மற்றும் 2 போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் பெந்தோங் பராட்டில் இருந்து லெண்டாங் வரையிலும், பெந்தோங் சுங்கச்சாவடிக்குப் பிறகும் போக்குவரத்து மெதுவாக நகர்ந்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset