நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரியை உயர்த்தும் அமெரிக்காவின் முடிவால் பொருளாதாரம் பாதிக்கப்படலாம்: பிரதமர்

மலாக்கா:

வரியை உயர்த்தும் அமெரிக்காவின் முடிவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 24 சதவிகிதம் பரஸ்பர வரிகளை உயர்த்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்க எடுத்த இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகளை அரசாங்கம் நிராகரிக்கவில்லை.

அமெரிக்க அதிபர் டோனால்ட்னால்ட் டிரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து, 

நாட்டின் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்  நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  மலேசியா மீதான அழுத்தத்தைக் குறைக்க எடுக்கக்கூடிய பல நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டது.

இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியில் சில தாக்கங்கள் இருக்கலாம் என்பதை நாம் மறுக்க முடியாது.

மலாக்காவில் நடைபெற்ற மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தில் பேசிய அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset