
செய்திகள் மலேசியா
மலேசிய இணையக் குற்றவாளிகளுடன் கூட்டு: இரு பெண்கள் உட்பட ஏழு பேர் தமிழகத்தில் கைது
சென்னை:
மலேசியாவில் இருந்தபடி இணையம் மூலம் மின்னிலக்க குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட ஏழு பேரை சென்னை போலிஸ் கைது செய்தது.
தமிழகத்தைச் சேர்ந்த சிலர் இந்த மோசடிக் கும்பலுக்கு முகவர்களைப் போல் செயல்பட்டதும், வங்கிக் கணக்கு விவரங்களை அளித்து பணம் பெற்றதாகவும் தெரியவந்தது.
மாநில இணையக் குற்றப்பிரிவு தலைமையக கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டலுக்கு இது தொடர்பாக தகவல் கிடைத்ததன் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார்.
மலேசிய கும்பலுக்கு உதவிய முகவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், 48 வயதான பைசுனிஷா என்ற பெண் மூலம் மோசடி செயல்களுக்கு ஆள்களை நியமித்த பாய்ஸ்கான் என்பவர் சிக்கினார்.
விசாரணையில் மதுரையில் உ ள்ள வங்கியில் பணியாற்றும் சேதுராமன் என்பவர் தங்களுடன் கூட்டுச் சேர்ந்து, போலி ஆவணங்கள் வாயிலாக, வங்கிக் கணக்குகள் துவங்க உதவி செய்தததையும் அவருக்கு இதற்காக நிறைய பணம் கொடுக்கப்பட்டதையும் பாய்ஸ்கான் தெரிவித்தார்.
மேலும் செல்லத்துரை, தேவி, அன்சாரி ஃபாசில் ஆகியோரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 7, 2025, 12:35 pm
ஆசியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி: அச்சத்தில் முதலீட்டாளர்கள்
April 7, 2025, 11:42 am
எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
April 7, 2025, 11:41 am
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்வு
April 7, 2025, 11:39 am
அமெரிக்கா விதித்த புதிய வரிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிபருடன் விவாதிக்கப்பட்டது: பிரதமர்
April 7, 2025, 11:38 am
பெண், சிறுவனை கத்தியால் குத்திய ஆடவர் குடியிருப்பாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்: போலிஸ்
April 7, 2025, 11:28 am
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு: கோலாலம்பூரில் நாளை விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது
April 7, 2025, 10:29 am