
செய்திகள் மலேசியா
ஜொகூரின் ஸ்ரீ காடிங்கில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகின்றது
ஜொகூர் பாரு:
பத்து பஹாட் அருகே உள்ள கம்போங் பஹாரு, ஸ்ரீ காடிங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை அதிகரித்துள்ளது.
அங்கு வெள்ளத்தால் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜொகூரின் ஸ்ரீ காடிங்கில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகின்றது.
இன்று காலை 8 மணியளவில் அங்குள்ள 88 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜொகூர் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், பத்து பஹாட்டிலுள்ள சுங்கை செங்காரங்கில் நீர் எச்சரிக்கை அளவை 3.37 மீட்டரை எட்டியுள்ளது.
அதே நேரத்தில் சுங்கை பத்து பஹாட்டில் 2.30 மீட்டராக எச்சரிக்கை நிலை உள்ளது.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை வானிலை நன்றாக இருப்பதாகத் தெரிவிகப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 7, 2025, 12:35 pm
ஆசியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி: அச்சத்தில் முதலீட்டாளர்கள்
April 7, 2025, 11:42 am
எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
April 7, 2025, 11:41 am
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்வு
April 7, 2025, 11:39 am
அமெரிக்கா விதித்த புதிய வரிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிபருடன் விவாதிக்கப்பட்டது: பிரதமர்
April 7, 2025, 11:38 am
பெண், சிறுவனை கத்தியால் குத்திய ஆடவர் குடியிருப்பாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்: போலிஸ்
April 7, 2025, 11:28 am
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு: கோலாலம்பூரில் நாளை விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது
April 7, 2025, 10:29 am