நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சீன கார் நிறுவனங்களின் சலுகை விலைகள் உள்ளூர் வாகனத் தொழில் துறையை பெரிதும் பாதிக்கிறது: புரோட்டோன் நிறுவனத் தலைமை அதிகாரி 

கோலாலம்பூர்:

சீன கார் நிறுவனங்களால் தூண்டப்பட்ட விலைப் போர் உள்ளூர் வாகனத் தொழில் துறையை பாதிக்கிறது.

புரோட்டான் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ரோஸ்லான் அப்துல்லா இதனை கூறினார்.

சீனா கார் நிறுவனங்களால் தூண்டிவிடப்பட்ட விலைப் போர் உள்ளூர் கார் தயாரிப்பு துறையை பெரிதும் பாதித்து வருகிறது.

குறிப்பாக மலேசியாவில் உற்பத்தி செயல்பாடுகளைக் கொண்ட அசல் உபகரண உற்பத்தியாளர்களை பாதிக்கும் ஆற்றலை அது  கொண்டுள்ளது.

சில கார் நிறுவனங்கள் வழங்கும் அதிக தள்ளுபடிகள் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும்.

Profile for BYD Cars Malaysia

ஆனால் நீண்ட காலமாக வாகன உதிரிபாகங்களை வழங்கி வந்த உள்ளூர் விற்பனையாளர்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விலைப் போரின் விளைவுகள் நாட்டில் உற்பத்தி, அசெம்பிளி ஆலைகளை  மட்டுமல்ல, உள்ளூர் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்களையும் பாதிக்கின்றன.

2025 All Jaecoo Cars List in Malaysia - Price, Specs, Images, Reviews |  WapCar

வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் வழங்கப்படும் கார்களை விரும்புவதால், கையிருப்பு அதிகரிக்கும் போது இந்த நிலைமை ஏற்படுகிறது.

அதே நேரத்தில், விலைகள் தொடர்ந்து குறையும் என்ற நம்பிக்கையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset