நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பலூன் வியாபாரி விவகாரத்தில் விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது: மேயர்

கோலாலம்பூர்:

பலூன் வியாபாரி விவகாரத்தில் விசாரணை முடியும் வரை  சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முகமட் ஷெரீப் இதனை கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் பலூன் வியாபாரியுடன்  மூன்று கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் சண்டையில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட மூன்று பணியாளர்களுக்கு தற்காலிகமாக பணியில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மாநகர் மன்றம், போலிஸ் விசாரணைக்கு வழி வகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அது சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும், முழுமையாகவும் எந்த குறுக்கீடும் இல்லாமல் மேற்கொள்ளப்படும்.

மேலும் இந்த முடிவு குறித்து பிரதமர் துறை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபாவுடனும் விவாதிக்கப்பட்டதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset