நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தந்தையின் கார் மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது

ஜொகூர்பாரு:

தந்தையின் கார் மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது என்று ஸ்ரீ ஆலம் போலிஸ் தலைவர் முகமட் சொஹாய்மி இஷாக் தெரிவித்தார்.

தந்தை வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் இருந்து தனது காரை  நகர்த்திக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் தாமான் டேசா ஹார்மோனியில் நிகழ்ந்தது.

அதிகாலை 2.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவரின் 27 வயது தந்தை புரோட்டான் எக்ஸ் 50 காரை நகர்த்த முயன்றபோது,   இடது டயரின் பின்புறத்திலிருந்து சத்தம் வருவதைக் கேட்டதாக கூறினார்.

அவர் வாகனத்தை விட்டு இறங்கியபோது,   ஓட்டுநர் தனது மகன் காரின் பின்புறத்தில் இரத்தப்போக்குடன் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டார்.

பின்னர் ஓட்டுநர் உடனடியாக தனது மகனை சிகிச்சைக்காக இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset