நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ புந்தோங் ஜாலான் சுங்கை பாரியில் உள்ள மேம்பாலம் சீரமைக்கப்பட்டு வருகிறது

ஈப்போ: 

ஈப்போ நகரில் உள்ள புந்தோங் பகுதியின்  சுங்கை பாரி  வட்டாரத்தில் மிகவும் பரபரப்பான மேம்பாலமாக கருதப்படும் ஜாலான் சுங்கை பாரி  மேம்பாலம் புதுப்பிக்கும் நடவடிக்கையில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர் 

அண்மை காலமாக இந்த மேம்பாலம் வாகனங்கள் கடந்து செல்லும் போதேல்லாம் ஆட்டங்காணும் சூழல் ஏற்பட்டது என்றும் இதனால் கீழே பயணம் செய்யும் வாகனமோட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது என்று   டிக்டாக் காணொலி வாயிலாக தெரிய வந்தது 

ஜாலான் சுங்கை பாரி, ராஜேஸ் உணவகத்திற்கு முன்புறம் இந்த மேம்பாலம் தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது 

மேம்பாலத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் இம்மேம்பாலம் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்று அறிய வருகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset