நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மார்ச் 31ஆம் தேதி சில மாநிலங்களில் கடுமையான மழை, சூரைக்காற்று வீசும்: மெட் மலேசியா அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

மலேசியாவில் நாளை நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாளை மார்ச் 31ஆம் தேதி திங்கட்கிழமை நாட்டிலுள்ள சில மாநிலங்களில் கடுமையான மழை, சூரைக்காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது 

கிளாந்தான், திரெங்கானு, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் மோசமான வானிலையை மக்கள் எதிர்நோக்குவார்கள்

மாலை வேளையில் பெர்லீஸ், கெடா, பினாங்கு, பேராக், ஜொகூர் மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் கடுமையான மழை பொழியும் என்று அனுமாணிக்கப்பட்டுள்ளது 

நாட்டின்  வானிலை தொடர்பான அண்மைய தகவல்களைப் பொதுமக்கள் மெட் மலேசியாவின் சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset