
செய்திகள் மலேசியா
தெலுங்குப் புத்தாண்டு அனைவருக்கும் வளமும், நலமும் வழங்கும் ஆண்டாக மலர வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
உகாதி திருநாளான இன்று, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொண்டாட்டம் என்றாலே இனிப்பு பலகாரங்களைப் பகிர்ந்து உண்பது, ஒருவரை ஒருவர் உபசரித்து மகிழ்வது என்று மகிழ்ச்சிக்குக் குறைவில்லாமல் இருக்கும்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், நாம் ஒவ்வொரு பெருநாளையும் இணைந்தே கொண்டாடி மகிழ்கிறோம்.
உகாதியின் சிறப்பு உகாதி பச்சடிதான் என்பார்கள்.
வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து இறைவனுக்குப் படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள்.
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் விதமாக உகாதி பச்சடி இருக்கிறது.
இதுபோன்ற பெருநாட்களை ஆடம்பரமாகக் கொண்டாடாமல், கொண்டாட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து சிக்கனமாக இருத்தல் சிறப்பு.
இந்தத் தெலுங்குப் புத்தாண்டு அனைவருக்கும் வளமும், நலமும் வழங்கும் ஆண்டாக மலர வேண்டும். அனைவருக்கும் இனிய உகாதி சுபகாஞ்சலு.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழி வாரியாக நம் பூர்வீகம் இருந்தாலும், இனத்தால் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை மறவோம்.
ஒற்றுமையே பலம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு மஇகா தேசியத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm