நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உகாதி புத்தாண்டு தெலுங்கு மக்களுக்கு வளமான வாழ்வையும் நலமான எதிர்காலத்தையும் தரட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மலேசியாவில் வாழ்கின்ற தெலுங்கு சமுதாய மக்கள் அனைவருக்கும் மஇகாவின் சார்பில் 2025 தெலுங்கு புத்தாண்டு வாழ்த்தை  தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல இன மக்களும் பல சமயத்தினரும் ஒருமித்துவாழும் இந்த மலேசியத்  திருநாட்டிற்கு இப்பொழுது பண்டிகை காலம் மலர்ந்துள்ளது.

தொடர்ந்து பல்வேறு சமய விழாக்கள் இடம் பெற இருக்கின்றன. 

அந்த வகையில் இன்று மார்ச் 30ஆம் நாள், உலகெங்கும் வாழ்கின்ற தெலுங்கு சமுதாய மக்கள் தங்களின் உகாதி புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த இந்த இனிமையான இன்ப தருணத்தில் மஇகாவும் பங்கெடுத்துக் கொள்ளும்,

அதேவேளையில் மலேசியாவில் வாழுகின்ற அனைத்து தெலுங்கு மக்களும் வளமான வாழ்வையும் நலமான எதிர்காலத்தையும் பெற்றிட மஇகா சார்பிலும் குடும்பத்தின் சார்பிலும் உகாதி சுபகாஞ்சலு வாழ்த்து தெரிவிப்பதாக  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தெலுங்குப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset