
செய்திகள் மலேசியா
பலூன் வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம்: நம் நாட்டின் மனிதாபிமானம் எங்கே?: ஹம்சா ஜைனுடின் கேள்வி
கோலாலம்பூர்:
பலூன் விற்பனையாளர் கோலாலம்பூர் மாநகர மன்ற அதிகாரிகளால் கடுமையாக நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் தனது அதிருப்தியை தமது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார்.
“இந்த வீடியோவை பார்த்தபிறகு, நம் சமூகம் எந்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்று அவர் கவலை தெரிவித்தார். நம்மை பற்றிய தோற்றம் இதுவாக இருக்க வேண்டுமா?
என் தேசத்தின் மனிதாபிமானம் எங்கே? இரக்கம்மிக்க, பொறுமையுடன் செயல்படும் சமூகமாக நாம் அறியப்பட வேண்டாமா?
ஆனால் இந்தக் காட்சி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்கிறது.”
“யா அல்லாஹ், என் நாட்டை காப்பாற்றவும், மக்களுக்கு நியாயமும், பரிவும் நிரம்பிய நிர்வாகத்தை வழங்கவும் உதவுவாயாக,” என அவர் சமூக ஊடகங்களில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதிகாரிகள் எந்தச் சூழ்நிலையிலும் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஹம்சா சைனுடின், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நிர்வாகம் முறையாக செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm