நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் உள்ள பலூன் விற்பனையாளரிடம் அத்துமீறிய கோலாலம்பூர் மாநகர மன்றம்: வலுக்கும் கண்டனங்கள்

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர் மாநகர மன்றம் (டிபிகேஎல்) ஓர் உள்ளூர் பலூன் விற்பனையாளருக்கு எதிராக கடுமையான முறையில் நடவடிக்கை எடுத்தது தொடர்பாக மலேசிய சமூக பராமரிப்பு அறக்கட்டளையின் (MCCF) துணைத் தலைவர் ஜீவிதன் பி.கணேசன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ரமலான் மாதம் மற்றும் நோன்பு பெருநாளை முன்னிட்டு, குடும்பத்திற்காக சிரமப்படுகின்ற ஒருவருக்கு எதிராக இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டதை கொள்வதை அவர் கண்டித்தார்.

அதேவேளை, சில வெளிநாட்டவர்கள் உரிய அனுமதிகள் இல்லாமல் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 

ஆனால் உள்ளூர் வியாபாரிகள் மீது மட்டும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். 

“சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஆனால், சிலருக்கு தளர்வும், சிலருக்கு மட்டும் கடுமையான நடைமுறையும் பின்பற்றப்படுவது ஏற்புடையதா? என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த பலூன் விற்பவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் தகவல் வழங்கினால், அவர் உதவ தயாராக இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் சமச்சீரான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் ஜீவிதன் வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset