
செய்திகள் மலேசியா
துறைமுகங்களில் கப்பல் பணியாளர்களை மாற்றுவது தொடர்பான எஸ்ஓபியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
கிள்ளான்:
துறைமுகங்களில் கப்பல் பணியாளர்களை மாற்றுவது தொடர்பான எஸ்ஓபியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன் இதனை கூறினார்.
கடல்சார் நடவடிக்கைகள் சீராக இருப்பதை குடிநுழைவுத் துறை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் கப்பல் பணியாளர்களை மாற்றுவது தொடர்பான எஸ்ஓபி எனப்படும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் குடியேற்ற சேவைகள் மூடப்படுவது பல முக்கிய துறைமுகங்களில் பணியாளர் பரிமாற்ற செயல்முறையை பாதிக்கிறது.
உதாரணத்திற்கு இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து சிறப்பு பாஸ்களை வைத்திருக்கும் குழுவினருக்கு,
பாசிர் கூடாங், பெங்கெராங் துறைமுகங்களில் வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் பணியாளர் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மலாக்கா, பட்டர்வொர்த், லுமுட் துறைமுகங்களில் பணியாளர் பரிமாற்ற சேவைகள் கிடைக்காது.
உண்மையில் கப்பல் முகவர்கள் குறிப்பிடுவதற்கு எந்த அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களும் இல்லை.
மேலும் குடியேற்றத்தை நாங்கள் கேட்கும்போது இந்த விஷயம் குறித்த தகவல்கள் வாய்மொழியாக மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm