
செய்திகள் உலகம்
இந்திய முஸ்லிம் பேரவை ஒருங்கிணைப்பில் ஷேக் சலாம் இந்தியா நடத்திய சமூக நோன்பு திறப்பு விழா
சிங்கப்பூர்:
ஷேக் சலாம் இந்தியா ஆண்டுதோறும் பல வர்த்தக கண்காட்ச்சிகளை சிங்கப்பூரில் நடத்தி வருகிறது . கோவிட் -19 க்குப்பிறகு இரமலான் மாதத்தில் இந்திய முஸ்லிம் பேரவையின் ஒருங்கிணைப்பில் மாபெரும் நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளை கடந்த மூன்றாண்டுகளாக நடத்திவருகிறது . ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இனம், மதம் கடந்து நோன்பு திறப்பில் கலந்து கொள்வார்கள்.
கடந்த மார்ச் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நோன்பு திறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ஷேக் சலாம் இந்தியா சமூக விருது, கல்வி ஊக்கப்பரிசு மற்றும் மாபெரும் நோன்பு துறப்பு என முப்பெரும் நிகழ்வாக நடந்தேறியது.
கல்வி ஊக்கப்பரிசு:
சிங்கப்பூர் சமூகத்திற்கு சேவையாற்றிய பலதுறைகளைச் சேர்ந்த பத்து தனிநபர்களுக்கு சமூக விருது அளித்து சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு குவைத்துக்கான சிங்கப்பூர் தூதர் திரு அபு பக்கர் முஹம்மது நூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமூக சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கியும், பத்து மாணவர்களுக்கு கல்வி ஊக்கப்பரிசு வழங்கியும் பாராட்டினார்.
ஷேக்சலாம் இந்தியா சமூக விருது:
ஷேக் சலாம் இந்தியா சமூக விருது வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர்கனி, ஹோப் இனிஷியேடிவ் அலையன்ஸ் தலைவர் ரெவ்ரன்ட் இசகல் டான், மூத்த சமூக அடித்தளத் தலைவர் டாக்டர் என். ஆர். கோவிந்தன், ஓய்வு பெற்ற நூலக அதிகாரி புஷ்பலதா நாயுடு, காஸா ரவுதா எனும் குடும்ப வன்முறை தடுப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஸஹாரா ஆரிஃப், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தலைவர் நா. ஆண்டியப்பன், ஜாமியா சிங்கப்பூர் இயக்குனர் முனைவர் ஈசா ஹஸன், கல்வியாளர் முனைவர் இஸ்கந்தர் அப்துல்லாஹ், சிங்கப்பூர் தென்காசி நலனபிவிருத்தி சங்கத்தின் துணைத்தலைவர் முஹம்மது ஜாஃபர் மற்றும் முஸ்லிம் கன்வெர்ட்ஸ் அசோசியேஷன் சிங்கப்பூரின் முன்னாள் தலைவர் ஆதம் பூ ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்திய முஸ்லிம் பேரவைத்தலைவர் முஹம்மது பிலால் , ஷேக் சலாம் இந்தியா நிறுவனத் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான சையத் ஷாகிர் அஹமது இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
முன்னதாக வரவேற்றுப் பேசிய முஹம்மது பிலால் , ஷேக் சலாம் இந்தியா நிறுவனம் பொருளீட்டுகிற காலத்தில் இதுபோன்ற நலத்திட்டங்களை செய்வதின் மூலம் இறைவனின் அருளீட்டுகிற காரியங்களில் ஈடுபடுகிறது என்று புகழாரம் சூட்டினார். இந்திய முஸ்லிம் பேரவையின் இணை அமைப்பினர், சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் பேராளர்கள், மலாய் முஸ்லிம் அமைப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மறுநாள் சனிக்கிழமை அன்றும் பொதுமக்களுக்கு நோன்பு திறப்புக்கு ஹரியாசின் உணவகத்தின் ஆதரவோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்
தக்கது.
- ஃபபித்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am