
செய்திகள் மலேசியா
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் தொடர்பில் முகநூலில் சர்ச்சையான கருத்து பதிவிட்ட ஜம்ரி வினோத் கைது
கோலாலம்பூர்:
முகநூலில் ஆலயம் தொடர்பில் சர்ச்சையான கருத்தை பதிவிட்ட சமய போதகர் ஜம்ரி வினோத்தை போலிசார் கைது செய்தனர்.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் இதனை உறுதிப்படுத்தினார்.
பொது ஒழுங்கை அச்சுறுத்தும் வகையில் முகநூலில் அவர் கருத்தை பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடமாற்றம் செய்வது தொடர்பில் இந்தப் பதிவு இருந்தது.
படாங் பெசார் போலிஸ் தலைமையகத்தில் ஜம்ரி வினோத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் நாளை கங்கார் நீதிமன்றத்திற்கு தடுப்புக் காவல் விண்ணப்பத்திற்காக அவர் கொண்டு வரப்படுவார்.
இந்தப் பதிவு தொடர்பாக தலைநகர் டாங் வாங்கி போலிஸ் தலைமையகத்தில் நேற்று ஒருவர் புகார் பதிவு செய்தார்.
புகார்தாரர் ஜம்ரி மீது தேசத் நிந்தனை தொடர்பில் குற்றம் சாட்டியதாகவும்,
இந்து நம்பிக்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் ஜம்ரியின் முகநூல் கணக்கில் உள்ள தரவுகளைப் பாதுகாத்து வைத்துள்ளது.
ஒரு விவோ கைத்தொலைபேசியையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm