நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டங்கள் 8 மாநிலங்களில் நடைபெறும்

புத்ராஜெயா:

மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டங்கள் மொத்தமாக 8 மாநிலங்களில் நடைபெறும்.

பிரதமரின் மூத்த செய்தித் தொடர்பாளர் துங்கு நஷ்ருல் அபைதா இதனை கூறினார்.

தொடக்கமாக நோன்பு பெருநாள் கொண்டாட்டம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி மலாக்காவில் நடைபெறவுள்ளது.

இதைத் தொடர்ந்து 8 மாநிலங்களில் இக்கொண்டாட்டம் நடைபெறும்.

பிரதமர் டத்தோஶ்ரீஅன்வார் இப்ராஹிம் எட்டு மாநிலங்களுக்கும் சென்று பாரம்பரியத்தைத் தொடருவார் என்றார்.

பிரதமர் ஏப்ரல் 6ஆம் தேதி மலாக்கா,  சிலாங்கூர், பகாங் (ஏப்ரல் 11), கிளந்தான், பினாங்கு (ஏப்ரல் 12), சரவா (ஏப்ரல் 19), பேரா (ஏப்ரல் 25),  பெர்லிஸ் (ஏப்ரல் 27) உள்ளிட்ட எட்டு மாநிலங்களுக்குச் செல்வார்.

கடந்த ஆண்டைப் போலவே, மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்ட விழாவை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடத்தும் என்று அவர் கூறினார்.

பிரதமர், சம்பந்தப்பட்ட மாநில மந்திரி புசார், முதலமைச்சருடன் கலந்து கொள்வார்.

எனவே, பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து, மலேசியாவின் வலிமையின் தூணாக நீண்ட காலமாக இருந்து வரும் உன்னத மதிப்புகள், அன்பு, மரியாதை மற்றும் நல்லெண்ணத்தை ஊக்குவிக்க பிரதமர் அழைக்கிறார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset