
செய்திகள் மலேசியா
சுயமாகத் தயாரித்த பட்டாசு வெடித்ததில் 12 வயது 5 விரல்களை இழந்தான்
பெட்டாலிங் ஜெயா:
தும்பட்டில் சுயமாகத் தயாரித்தப் பட்டாசுகளுடன் விளையாடுபோது அவை வெடித்ததில் 12 வயது 5 விரல்களை இழந்தான்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுவன் தனது இரு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசு வெடித்தது.
பாதிக்கப்பட்டவரின் மற்ற இரண்டு நண்பர்களுக்கும் காயம் ஏற்படவில்லை என்று கிளந்தான் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஜைனி ஹுசின் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர், தொடர் சிகிச்சைக்காக Raja Perempuan Zainab II மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு தும்பட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது சிறுவனின் உடல்நலம் நன்றாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிளந்தானில் இதுவரை மொத்தம் 23 பேர் பட்டாசு வெடித்ததில் காயமடைந்து விரல்கள் உடைந்ததாக ஜைனி கூறினார்.
மொத்தத்தில், பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் சிகிச்சை பெற்றதாகவும், மேலும் 13 பேர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm