
செய்திகள் மலேசியா
1 எம்டிபி வழக்கில் 2019ஆம் ஆண்டு தான் நஜிப் சந்தேக நபரானார்: விசாரணை அதிகாரி
கோலாலம்பூர்:
1 எம்டிபி நிதிகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மோசடி தொடர்பான போலிஸ் விசாரணையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சந்தேக நபராக இருந்தார்.
ஓய்வு பெற்ற விசாரணை அதிகாரி ஆர். ராஜகோபால் இன்று புத்ராஜெயாவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு இந்த விசாரணையின் தொடக்கத்தில் முன்னாள் நிதியமைச்சர் சந்தேக நபராக இல்லை.
ஆனால் 2019 ஆம் ஆண்டு தான் அவர் சந்தேக நபராக மாறினார்.
நஜிப்பிற்கு எதிரான 2.27 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி விசாரணையின் போது, துணை அரசு வழக்கறிஞர் அஹ்மத் அக்ரம் கரிப்பின் குறுக்கு விசாரணை கேள்விகளுக்கு கார்ப்பரேட் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவருமான அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதனிடையே 1 எம்டிபி நிதிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றவியல் நம்பிக்கை மோசடி குற்றங்கள் எதற்கும் நஜிப் மீது இதுவரை குற்றம் சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm