
செய்திகள் மலேசியா
நோன்பு நோற்காத முஸ்லிம்களுக்கு உணவு விற்ற பெண்ணுக்கு 5 நாட்கள் சிறை
செத்தியூ:
கடந்த வாரம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்காத முஸ்லிம்களுக்கு உணவு விற்றதாக ஒப்புக்கொண்ட ஒரு பெண்ணுக்கு செத்தியூ ஷரியா நீதிமன்றம் ஐந்து நாட்கள் சிறைத்தண்டனையும் 2,000 ரிங்கிட் அபராதமும் விதித்தது.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் 38 வயதான பெண் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.
இதனை அடுத்து ஷரியா நீதிமன்ற நீதிபதி மாட் ரோபி புசு இந்த தண்டனையை விதித்ததாக திரெங்கானு ஷரியா அமலாக்க அதிகாரி தலைவர் ஹைசி சைடி தெரிவித்தார்.
அப்பெண் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தி மார்ச் 28 வரை கிளந்தானில் உள்ள பெங்கலன் சேபா பெண்கள் தடுப்பு மையத்தில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
அந்தப் பெண் மீது 2001 ஆம் ஆண்டு திரெங்கானு ஷரியா குற்றவியல் குற்றச் சட்டத்தின் பிரிவு 19(ஏ) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm