நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புற்றுநோய் மூளைக்கு பரவியது: ஜமால் யூனோஸின் உடல்நிலை மோசமடைகிறது

கோலாலம்பூர்:

சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர் ஜமால் முகமட் யூனோஸின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது.

அவரது நுரையீரலில் முன்பு இருந்த புற்றுநோய் செல்கள் இப்போது அவரது மூளைக்கும் பரவியுள்ளன.

ஜமால் தற்போது அம்பாங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

​​ஜமால் இந்த விஷயத்தை ஊடகத்தினரிடம்  உறுதிப்படுத்தினார்.

மேலும் கடந்த சனிக்கிழமை முதல் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எம்ஆர்ஐ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, நுரையீரலில் முன்பு இருந்த புற்றுநோய் செல்கள் இப்போது மூளைக்கு மூன்று சென்டிமீட்டர் பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset