நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவு இலாகா அதிகாரிகளின் சேவைகள் அளப்பரியது: மஇகா இளைஞர் பிரிவு பாராட்டு

ஜொகூர்பாரு:

குடிநுழைவு இலாகா அதிகாரிகளின் சேவைகள் அளப்பரியது என்று மஇகா இளைஞர் பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் பாராட்டினார்.

தேசிய மஇகா இளைஞர் பிரிவு, ஜொகூர் மாநில குடிநுழைவு இலாகாவின் ஒத்துழைப்புடன் இன்று காலை ஜொகூர்பாரு துவாஸ் சுல்தான் அபு பாக்கார் குடிநுழைவுத்துறை மையத்தில் நோன்பு துவங்குவதற்கு முன்னரான ஸஹர் உபசரிப்பினை சிறப்பான முறையில் ஏற்று நடத்தியது.

இந்நிகழ்வில் தேசிய மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கலந்து கொண்டார்.

மேலும் ஜொகூர் மாநில மஇகா தலைவரும் மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினருமாகிய ரவீன்குமார், சிலாங்கூர் மாநில மஇகா செயலாளர் சசிதரன், இளைஞர் பிரிவு பொறுப்பாளர்கள் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேசிய மஇகா இளைஞர் பிரிவு தலைவர் அர்விந்த் கிருஷ்ணன்,

நாட்டின் எல்லை பகுதிகளைப் பாதுகாக்கும் அளப்பரியப் பணிகளை மேற்கொண்டு வரும் முன்வரிசை பணியாளர்களான குடிநுழைவுத்துறை அதிகாரிகளின் சேவைகளை நினைவுக்கூறும் வகையில் இன்றைய நிகழ்வு அமைந்ததாகக் கூறினார்.

இன்று 150க்கும் அதிகமான குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்ட ஸஹர் உபசரிப்பு, மலேசியாவின் பல்லின மக்களின் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தினையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.  

அதே வேளையில் முழு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அவர்களுக்கு நமது நன்றிகளைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பினையும் இந்நிகழ்வு வழங்கியுள்ளது.

இன்றைய ஸஹர் உபசரிப்பில் பங்கேற்ற அன்பர்களுக்கு நாங்கள் ராயா பரிசுக்கூடைகளையும் வழங்கினோம். 

இவ்வாண்டு நோன்புப் பெருநாள் நாட்டின் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தி மக்களின் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் என்று நம்பிக்கை கொள்வோம் என அர்விந்த் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset