
செய்திகள் மலேசியா
விமான இயந்திரத்தில் தீ விபத்தா? ஏர் ஆசியா மறுப்பு
கோலாலம்பூர்:
கோலாலம்பூரிலிருந்து சீனாவின் சென்ஷான் நோக்கி புறப்பட்ட AK128 விமானத்தின் இயந்திரத்தில் தீ விபத்து காரணமாக மீண்டும் திருப்பி விடப்பட்டதாக வெளிவந்துள்ள தகவலை ஏர் ஆசியா நிறுவனம் மறுத்துள்ளது.
விமான இயந்திரத்தின் குழாய் சேதமடைந்ததால் வெப்பக் காற்று வெளியேறியது.
அதனை பழுதுபார்ப்பதற்காக விமானம் மீண்டும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு திரும்ப வேண்டியிருந்தது என்று ஏர் ஆசியா விளக்கமளித்துள்ளது.
மேலும், விமானத்தின் இயந்திரத்தில் தீ விபத்து எதுவும் இல்லை என்பதை ஏர் ஆசியா உறுதிப்படுத்தியது.
விமானம் திங்களன்று மீண்டும் சேவைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான நடைமுறைகள் நடத்தப்பட்ட பிறகு எந்தச் சம்பவமும் இல்லாமல் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்று அவர் மேலும் கூறினார்.
171 பயணிகளும் பாதுகாப்பாக இறங்கியதாகவும், அதிகாலை 3.46 மணிக்கு புறப்பட்டு சீனாவின் ஷென்செனின் பாவோன் சர்வதேச விமான நிலையத்தில் காலை 7.51 மணிக்கு தரையிறங்கியதாகவும் ஏர் ஆசியா உறுதிப்படுத்தியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm