நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவனின் மரணத்திற்கு காரணமான குடிபோதையில் வாகனம் ஓட்டிய வியட்நாம் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது

ஜார்ஜ்டவுன்:

மாணவனின் மரணத்திற்கு காரணமான குடிபோதையில் வாகனம் ஓட்டிய வியட்நாம் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மாதம் குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒரு மாணவனின் மரணத்திற்கும் மற்றொருவருக்கும் காயம் ஏற்படுத்தியதாக 40 வயதுடைய  நுயென் தி கிம் ஓன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நத்ராதுன் நைம் முன் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்டது.

இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து அப்பெண் விசாரணை கோரியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 10,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதித்து, இரண்டு உள்ளூர் உத்தரவாதங்களுடன், அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும்  வழக்கு தீர்க்கப்படும் வரை அவரது ஓட்டுநர் உரிமத்தை நிறுத்தி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் ஏப்ரல் 21 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset