நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடையாள அட்டையை கொண்டு மானிய விலையிலான ரோன் 95 பெட்ரோலை மக்கள் பெற்று கொள்ளும் நடைமுறை அமல்படுத்தப்படும்: அமீர் ஹம்சா

கோலாலம்பூர்:

அடையாள அட்டையை கொண்டு மானிய விலையிலான ரோன் 95 பெட்ரோலை மக்கள் பெற்று கொள்ளும் நடைமுறை அமல்படுத்தப்படும்.

இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா ஹசிசான் இதனை கூறினார்.

இந்த ஆண்டின் முதல் பாதிக்குப் பிறகு இரண்டு விலை நிலைகளில் ரோன் 95 பெட்ரோல் விற்கப்படவுள்ளது.

அடையாள அட்டையை கொண்டு மக்களுக்கு  மானியம் விலையுடனான் ரோன் 95  பெட்ரோலை பெட்ரோலை பெறுவதற்கான  முழுமையான வழிமுறையை அரசாங்கம் அறிவிக்கும்.

நாட்டின் நிதியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசாங்கம் எந்த கொள்கை அமலாக்கத்தையும் அவசரமாக அறிவிக்க விரும்பவில்லை.

இது தொடர்பில் இன்னும் வேலைகள் நடந்து வருகிறது. இதனால் இது குறித்து முழுமையான அறிவிப்புகளை செய்ய முடியாது என்று அவர் கூறினார்.

ரோன் 95 மானிய விலைகள், மானியம் இல்லாத விலைகள் என இரண்டு விலை நிலைகளை அரசாங்கம் அமல்படுத்தவுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset