
செய்திகள் மலேசியா
உணவகத்தில் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குண்டர் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது: டத்தோ குமார்
ஜொகூர்பாரு:
உணவகத்தில் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குண்டர் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜொகூர் மாநில போலிஸ்படைத் தலைவர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
கடந்த ஜனவரி 8 ஆம் தேதி இங்குள்ள தாமான் செத்தியா இந்தா அருகே உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஒரு குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 8, மார்ச் 17 ஆகிய தேதிகளில் நகரைச் சுற்றி நடத்தப்பட்ட பல தனித்தனி நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலையில் தொடர்புடையதாக நம்பப்படும் முக்கிய சந்தேக நபரான 64 வயது உள்ளூர் ஆடவர் முதல் சோதனை நடவடிக்கையின் போது போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
தாமான் செத்தியா இந்தாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இரண்டு குண்டர் கும்பலுக்கு இடையிலான பழிவாங்கும் நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm