நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாசிப்பதில் பலவீனமாக உள்ளனர் என்ற பேச்சுக்கே  இடமிருக்கக் கூடாது: செங்குட்டுவன்

கோலாலம்பூர்:

சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாசிப்பதில் பலவீனமாக உள்ளனர் என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது.

சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்மொழி பிரிவின் உதவி இயக்குநர் செங்குட்டுவன் வீரன் இதனை கூறினார்.

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான தமிழ்மொழி வாசிப்பு பட்டறை இன்று செந்தூல் எச்ஜிஎச் மண்டபத்தில் நடைபெற்றது.

மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு ஆசிரியர்கள் 70 பாலர் பள்ளி ஆசிரியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தலைமையாசிரியர்களும் இப்பட்டறையில் கலந்து கொண்டனர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே இருக்கும் வாசிப்பு சிக்கல்களுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதே இப்பட்டறையின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக முதலாம் ஆண்டிலேயே இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்.

அவ்வகையில் ஆசிரியர்களுக்கு எளிதாக வாசிப்பது எப்படி என்ற  யுக்திகள் இப்பட்டறையில் வழங்கப்பட்டது.

மேலும் அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு வாயிலாக போதான முறைகளை மேற்கொள்வது குறித்தும் பயிற்சியளிக்கப்படும்.

இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாசிப்பதில் பலவீனமாக உள்ளனர் என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது என்று செங்குட்டுவன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset